"ஆனது ஆகி விட்டது என்று சாதாரணமாக பேசிய டிஎஸ்பி பிரதாபன் "ஆவேசமடைந்த வியாபாரிகள்..!

0 21701

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட் பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், ஆனது ஆகி விட்டது என்று டிஎஸ்பி பிரதாபன் கூறுவது போன்றும் இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதி ஜெயராஜ், பெனிக்ஸ் விசாரணைக்கு சென்ற போது கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட பெனிக்ஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு 20 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். இதையறித்து ஆவேசமடைந்த சாத்தான்குளம் வியாபாரிகள் போராட்டத்திற்கு தயாராகினர். அப்போது பஜாருக்கு சென்ற டிஎஸ்பி பிரதாபன் ஆனது ஆகி விட்டது என்று கூறியதால் வியாபாரிகள் ஆவேசம் அடைந்தனர்.

ஆனது ஆகிவிட்டது என்று கூறினால் என்ன அர்த்தம் என்று வியாபாரிகள் கேட்கும் நிலையில் அதற்கு டிஎஸ்பி மழுப்பலாக பதில் அளிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments